Tuesday, March 14, 2023

BEd 21st century group 1



 


National  Institute  of  Education

Bachelor   of   Education (Honours)  Degree

Group -  1 




         தலைப்பு 

   21ம் நூற்றாண்டு கற்றல்     திறன்கள், அபிவிருத்தி 


       



 

உள்ளடக்கம் 

 01. நோக்கம்
 02. குறிக்கோள்
 03. 21ம் நூற்றாண்டு  கல்வி அறிமுகம்
 04. 21ம் நுாற்றாண்டு கல்வி திறன்கள்                   
                    4.1  நுண்ணாய்வுச் சிந்தனை  
                    4.2 ஆக்கத்திறன்                                                                                                                 
                    4.3  இணைந்து செயலாற்றுதல்                                                                                
                    4.4  தொடர்பாடல் 
 05. 21ம் நுாற்றாண்டின் பாடசாலை
 06. 21ம் நுாற்றாண்டின்  வகுப்பறை 
 07. 21ம் நுாற்றாண்டின் அதிபர், நிர்வாகம்
 08. 21ம் நுாற்றாண்டின் ஆசிரியர்
 09. 21ம் நுாற்றாண்டின் கலைத்திட்டம்
10. 21ம் நுாற்றாண்டின் ஆசிரியர் வகிபாகம்
11. 21ம் நுாற்றாண்டின்  மதிப்பீடு
12. 21ம் நுாற்றாண்டிற்கு பொருந்தக் கூடிய நடப்பு பாடசாலை முறைமைக்கான செயன்முறை அறிவு
13. 21ம் நுாற்றாண்டிற்குப் பொருத்தமான  ஆசிரியராக  மாறுதல்
14. 21ம் நுாற்றாண்டு  கல்வியை  வகுப்பறையில் எவ்வாறு பிரயோகிப்பது?
15.  முடிவுரை
16. Group  Profile



01.நோக்கம்

செயல்திட்ட அடிப்படையிலான கற்றல் செயற்பாடுகளினுாடாக  மாணவர்கள் 21ம் நுாற்றாண்டு திறன்களைப் பெற்றுக்  கொள்ளச்  செய்தல்.


02.குறிக்கோள்கள்

  • 21ம் நுாற்றாண்டு திறன்களை அபிவிருத்தி அடையச்  செய்தல்.
  • தமது கருத்துக்களை வாய்மொழி   மூலமாகவும்,எழுத்து வடிவிலும், சாதனங்கள்  மூலமும் விளைதிறனாகவும், வினைதிறனாகவும் வெளிப்படும் ஆற்றலை மேம்படுத்தல்.

  

                                    03. 21ம் நுாற்றாண்டு கல்வி அறிமுகம் 

21ம் நுாற்றாண்டின் கல்வி என்பது பொருளாதார, தொழிநுட்ப மற்றும் சமூக மாற்றங்களுக்கு பதிலளிக்கும் ஒன்றாகும். கல்வியானது வகுப்பறைகளைத் தாண்டியதாக காணப்படுகின்றது. 21ம் நுாற்றாண்டு கல்வியை  நோக்கி நகர்தல் என்பது சமகாலத்தின் தேவைக்கும், சமகாலத்தில் எழும் வினாக்களுக்கும்  பொருத்தமான கல்வி அணுகுமுறைக்குச்  செல்வதாகும்.

21ம் நுாற்றாண்டுக்கான கல்வி  முறையானது மாணவர்களை மையப்படுத்தியதாக தேவைகளையும், திறன்களையும், தேர்ச்சிகளையும் வழங்கும்  கல்வியாகக்   காணப்படுகிறது.

 இக்கல்வி  முறையானது தொடர்பாடல் தொழிநுட்ப சாதனங்களுடாகவே அதிகளவு  தொடர்புபட்டதாக காணப்படுகிறது.




 

    04. 21ம் நுாற்றாண்டு திறன்களாக 
  1. நுண்ணாய்வுச் சிந்தனை    
  2. தொடர்பாடல்
  3. இணைந்து செயலாற்றல்
  4. ஆக்கத்திறன்



               



நுண்ணாய்வுச் சிந்தனை

நுண்ணாய்வுச் சிந்தனை என்பது  தர்க்க ரீதியாகச் சிந்தித்து சரியான முடிவுகள் எடுப்பது.  கிடைக்கின்ற தகவல்களை வைத்து மதிப்பீடு செய்து சரி, பிழைகளை  வேறுபடுத்திக் காட்டுவது.

நுண்ணாய்வுச் சிந்தனை செயற்பாடுகளாக

  •  சிக்கல்களை தீர்ப்பதை ஊக்குவித்தல்
  • புதிர் தீர்க்கும் பணிகளைக் கொடுத்தல்
  • மாணவர்களிடம் சில  பொறுப்புக்களை வழங்குதல்.
  • மாணவர்கள் கேள்வி கேட்பதற்கு சந்தர்ப்பமளித்தல்.
  • வாசிப்புத்திறனை அதிகரித்தல்.
  • தர்க்க ரீதியான வாதங்களில் ஈடுபட  சந்தர்ப்பமளித்தல் 


 

நுண்ணாய்வுச் சிந்தனையின் சிறப்பு

  • மாணவர்களின் எதிர்கால  வெற்றிக்கு அடிப்படையாக   அமைகின்றது.
  • கல்வி, தொழிற்கல்வி  நிலைகளில்  நிலைத்து நிற்கவும், சாதிக்க உதவி புரிகின்றது.
  • மாணவர்களுக்கு  அவசியமான ஒரு திறனாக  காணப்படுகிறது. 


           
              தொடர்பாடல்

  • தமது கருத்துக்களை வாய்மொழி  மூலம்  வெளிப்படுத்தல். 
  • தமது கருத்துக்களை எழுத்துக்கள்  மூலம்  வெளிப்படுத்தல். 
  • தமது கருத்துக்களை சாதனங்கள்  மூலம்  வெளிப்படுத்தல். 

   



இணைந்து  செயற்படல்
ஒன்றுக்கு  மேற்பட்டோர் இணைந்து  பணியாற்றும் இடத்தில் ஒரு இலக்கை  அடிப்படையாகவும், தொடர்ச்சியாகவும்  பணியாற்றுதலைக் குறிக்கும்.

நேருக்கு  நேராகவும், நிகழ்நிலையிலும் பணியாற்றும் திறன் கொண்டமைந்தது. 

இணைந்து   செயலாற்றும் போது
  • வேறுபட்ட சிந்தனைகள் உருவாகும்.
  • பரஸ்பர  கருத்துக்கள் உருவாகும்.
  • புத்தாக்கச்  செயற்பாடுகளை உருவாக்க  முடியும். 
  • இணைந்து  செயலாற்றுதல்.
  • அறிவுசார் பணிச்சூழலில் வெற்றியடைவதற்கு  உதவுகின்றது.
  • அணியாகப் பணி புரிதல்.






        ஆக்கத்திறன்
  • முன்நோக்குகள், புதிய கருத்துக்கள் மற்றும் தீர்வுகளைத் தோற்றுவிக்கும் ஆற்றலே  ஆக்கத்திறன் எனப்படும்.
  • புதுமையானவற்றை தனித்தன்மை  உள்ளனவாகப்  படைக்கும் அல்லது உருவாக்கும் ஆற்றல்  ஆக்கத்திறன்  எனலாம்.
  • பல்வேறு  பண்புகள், ஆற்றல்கள்  ஆகியவற்றின் தொகுப்பே  ஆக்கத்திறனாகும். 


 ஆக்கத்திறனின்  இயல்புகள்

  • ஒரு செயன்முறை,
  • தனிச்சிறப்புடைய கற்பனை
  • பெறுமானம் உடையது.
  • தனித்துவமானது.
  • விரிசிந்தனையுடன்   தொடர்புடையது.
  • புதுமைகளின்  விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
  • சிந்தனை  வளர்ச்சிடன்  தொடர்புடையது.
  • நுண்மதியுடன்   தொடர்பு அற்றது.
  • மனிதனது  முன்னேற்றத்திற்கு  ஆதாரமானது.







 




05. 21ம் நுாற்றாண்டின் பாடசாலை

  •  எதிர்கால நோக்கு         
  • கூட்டுப்பணி                                              
  • தொழிநுட்பத்துடன் கூடிய வகுப்பறை  
  • Big Picture ல் கவனம் செலுத்துதல் 
  • தந்திரோபாயத்திட்டம்
  • 21ம் நூற்றாண்டில் கற்பவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு  நெருக்கடி முகாமைத்துவம் 
  • பல்வேறு கூட்டுப்பணியுடன் கூடிய குழுக்களை உருவாக்கல்
  • உலகின் பிற பகுதிகளிலுள்ள  மாணவர்களை அவர்களின் வயதுடையவர்களுடன் இணைத்தல்.



06. 21ம் நுாற்றாண்டுக்குரிய   வகுப்பறை

  • தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு
  • ஒன்றிணைந்த சூழல்
  • புத்தாக்க  வெளிப்பாட்டிற்கான  வாய்ப்புக்கள்
  • வசதியளிப்பவராக  ஆசிரியர்
  • வெளிப்படையான   மதிப்பீடுகள்
  • வினவல்  அடிப்படையிலான அணுகுமுறை
  • கைகளில்  தவழும் கற்றல்
  • நியாயப்படுத்தப்படும்  பதில்கள்
  • பிரதிபலிப்புக்கள் எழுதுதல்
  • பிரச்சினைகளை  தீர்க்கும் முறைகளைப் பயன்படுத்தல்.




07. 21ம் நுாற்றாண்டின் அதிபர், நிர்வாகம்

  • சுறுசுறுப்பானவர்
  • மாறும் உலகை  கையாளக் கூடியவர்.     
  • வகை கூறுபவர்.
  • வெளிப்படைத்தன்மை உடையவர்.
  • உடன்பாடான மனப்பாங்கு  கொண்டவர்.
  • ஆக்கத்திறனுடையவர்
  • தகவல்  தொழிநுட்ப  திறனுடையவர்
  • சிறந்த  தொடர்பாடல் கொண்டவர்
  • ஒப்படைக்கும் திறனுடையவர்
  • பிரச்சினைகளை  தீர்ப்பவர்
  • முன்னுரிமை  அளிப்பவர்

 

 

 08. 21ம் நுாற்றாண்டின் ஆசிரியர்


  • வசதி ஏற்படுத்திக் கொடுப்பவர்
  • ஆய்வாளர்
  • மாற்றத்தின் முகவராகச் செயற்படுவார்
  • டிஜிற்றல் வடிவைமப்பாளர்
  • சிறந்த ஒத்துழைப்பாளர்
  • சிறப்பாக துலங்குவார்
  • ஆக்கத்திறனுடையவர்
  • கதை சொல்லி
  • தொடர்ச்சியாகக் கற்பவர்
  • உறவுகளை கட்டியெழுப்புபவர்
  • சிறந்த தொடர்பாளர்
  • துார நோக்குடையவர்
  • முன்னுதாரண மாதிரி
  • இடர் ஏற்கும் தன்மையுடையவர்           


09. 21ம் நுாற்றாண்டின் கலைத்திட்டம்

  • ஒன்றிணைந்து  பிரச்சினை தீர்த்தல்.              

  • புத்தாக்கம்
  • கைகளால் கற்றல்
  • கலாசார தேர்ச்சிகள்
  • முறையான தீர்மானம் எடுத்தல்           
  • தலைமைத்துவம்
  • தகவல் மற்றும் ஊடக கல்வியறிவு
  • தலைமைத்துவம்
  • தர்க்க சிந்தனை
  • ஆரம்பிக்கும் திறனும் சுயபொறுப்பும் இருத்தல்.
  • எழுத்து மற்றும் வாய் மூல தொடர்பாடல் திறன்களை  மேம்படுத்தல்.



                10. 21ம் நுாற்றாண்டின் ஆசிரியர் வகிபாகம்

  • சகல  செயல்களிலும் தன்னிலைத்  தெளிவு
  • பொருத்தமாகவும் சிறந்த முறையிலும் இனங்காணப்பட்ட  கலைத்திட்ட நடைமுறைப்படுத்தல்கள்
  • ஆசிரியர் தலைமைத்துவம்
  • மாணவர்களின்  அடைவுகளை மதிப்பீடு செய்யும்  ஆற்றல்
  • ஆசிரியர் அணி உருவாக்கமும் அணி நிலைப்பாடும்
  • ஆசிரியர்களுக்கிடையிலான  இடைவினையுறவு
  • பொருத்தமான  வளங்களைத் தேடல்
  • மூகத்துடனான  இடைவினையுறவு
  • கற்பித்தலின்  தொடர்ந்தேர்ச்சியான  உணர்வு



              11.  21ம் நுாற்றாண்டின்  மதிப்பீடு

  பரீட்சித்தல்                                        ➩மாற்று மதிப்பீடுகள் 

➤  பேனை மற்றும்  பென்சில்       ➩ செயற்திறன் மதிப்பீடு

➤  சரியான ஒரு விடை                    ➩ பல சரியான விடைகள்

 ➤  சுருக்கமானது                               ➩ கட்டமைக்கப்பட்டது

 ➤  வெளியீடு மாத்திரம்                ➩ முறையாக்கம் மற்றும் வெளியீடு

  ➤  திறன்களை அடிப்படையானது       ➩ பணிகளை  அடிப்படையானது

 ➤  தனித்தனி விடயங்கள்              ➩ அறிவை பிரயோகித்தல்

➤  சூழமைவு சாராதது                    ➩ சூழமைவு சார்ந்தது

 

12.   21ம் நுாற்றாண்டிற்கு பொருந்தக் கூடிய நடப்பு பாடசாலை முறைமைக்கான செயன்முறை அறிவு

Argument reality
Artificial  intelligence
Automation virtual  reality
Robotics போன்ற அதிநவீன தொழிநுட்பங்களை ஒருங்கிணைத்து கற்றலை மேம்படுத்துவதற்கான நகர்வை மேற்கொள்ள வேண்டும்.

  • பாடசாலைகள் கற்றலுக்கும் செயலுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைத்தல்.
  • சிந்தனை மற்றும் பகுப்பாய்வு திறன்களை வளர்த்துக் கொள்ள வழிகாட்ட வேண்டும்.
  • பாடசாலைகளில் இல்லாத தொழிநுட்ப உட்கட்டமைப்பை விரிவாக்கலும்  செய்முறை ரீதியாக செயற்படுத்தலும்.
  • ஊடாடும் தட்டைப் பலகைகள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல்.

13.  21ம் நுாற்றாண்டிற்குப் பொருத்தமான  ஆசிரியராக  மாறுதல்

21ம் நுாற்றாண்டிற்குப் பொருத்தமான ஆசிரியர் கற்றல் கற்பித்தலுக்கான தன்னை வசதியளிப்பவராக மாற்றமடையச் செய்தல் வேண்டும்.

ஒர் ஆசிரியரின் வகிபாகங்கள் யாவும் எதிர்கால சமூகத்திற்கான  வகிபாகங்கள் என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும்

➨ உற்பத்தித்திறனில் உற்பத்திச்  செணல்களில் ஈடுபடக்கூடிய  ஒரு மனித வளமாவதற்கான திறன்களை  மாணவர்களிடத்தில்  ஏற்படுத்தல்,

➨ தன்னைப் போன்று மற்றவர்கள்  தொடர்பாகவும் சிறந்த மனப்பாங்கை விருத்தி  செய்வதற்கான  ஆற்றலை மேம்படுத்தல்.

➨ பல்வேறு  பாடத்துறைகளையும் மாணவர்கள் கற்பதற்கு ஊக்குவித்தல்

➨ மாணவர்கள் ஒரு சிறந்த ஒழுங்கமைப்பை இனங்காண  உதவுதல்

➨ மாணவர்களுக்கு ஒரு சிறந்த ஒழுங்கமைப்பை இனங்காண உதவுதல்.

➨ மாணவர்கள் தீர்மானம் மேற்கொள்ளும்   செயன்முறையை  மேற்கொள்ளல்.




14. 21ம் நுாற்றாண்டு  கல்வியை  வகுப்பறையில் எவ்வாறு பிரயோகிப்பது

  • 21ம் நுாற்றாண்டில் வாழும் ஒருவர் முக்கியமான 4 C திறன்களையும்  பெற்றிருத்தல் வேண்டும். 

                         தொடர்பாடல் திறன்   
                        கூட்டுப்பணித் திறன்
                        பகுத்தறியும் சிந்தனை
                        ஆக்கச்சிந்தனைத் திறன்

  • 21ம் நுாற்றாண்டில் மாற்றமடையும்   சூழலுக்கேற்ப  ஆசிரியர் தமது வகிபாகத்தை  மாற்றி கற்பித்தலில்  ஈடுபடல்     உதாரணமாக - வசதியளிப்பவர்

  • நவீன கற்றல் கற்பித்தல் நுட்பங்களை கையாளுதல்.

              உதாரணமாக - கலப்பு கற்றல் (Blended Learning)
                                              கலப்பின கற்றல் (Hybrid Learning)

  • தொழிநுட்ப அறிவு மற்றும் தொழிநுட்ப பாவனை மாற்றங்களுக்கேற்ப தம்மை  இற்றைப்படுத்தி கற்பித்தலில்       ஈடுபடல்.
  •   மாணவர்களது தேவை, விருப்பம் அறிந்து கற்பித்தலில் ஈடுபடுத்தல்.
  •  பூகோள ரீதியில் அணிதிரட்டும்  கல்வி முறையைக்  கையாளுதல்.
  • எதிர்காலத்தில் தொழிற்படையினரை வினைத்திறனாக்கும் வகையில் தேர்ச்சிகள், இலக்குகளை நிர்ணயித்து கற்பித்தலில்  ஈடுபடல்.
  • பல்வகை  கலாசாரங்களை  மதிப்பளிக்கும் பொறுப்பினை விருத்தி செய்யும் வகையில் செயற்பாடுகளை   வடிவமைத்தல்.


முடிவுரை 

               மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கிணங்க  என்றும் மாறிக்  கொண்டிருக்கின்ற  உலகின் அறிவுசார் சவால்களுக்கு  முகங்கொடுக்க வேண்டியதன் பேரில்  21ம் நுாற்றாண்டில்  இருக்க  வேண்டிய  பாடசாலை, வகுப்பறை , அதிபர், ஆசிரியர்கள்,  கற்பித்தல்  முறைகள்  மாணவர்களிடம் காணப்பட  வேண்டிய திறன்கள்   என்பன பற்றி கவனம்  செலுத்தியிருந்தோம், அந்த வகையில்  மாணவர்கள் பல விடயங்களைத் தெரிந்தும், புரிந்தும் வைத்திருக்க வேண்டும். அதை அவர்கள் பயன்படுத்தவும் வேண்டும்.  இதன் மூலம் இன்று  வேகமாக மாறிவரும் தொழிநுட்பத்தால்  இயக்கப்படும் உலகை   வெற்றி கொள்ள முடியும்.










Group Profile

   

Group - 1

Name :- Sureka Krishnathas   
Reg. No :- BS22TE0198
Course   :-  Dance 

BEd 21st century group 1

  National  Institute  of  Education Bachelor   of   Education (Honours)  Degree Group -  1            தலைப்பு      21ம் நூற்றாண்டு கற்றல்  ...